வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றிருந்தார். இந்த சந்திப்பால் மேற்குலக நாடுகள் பெரும் குழப்பநிலைக்கு உள்ளாகியுள்ளதாக கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ரஷ்யாவில் இருந்து கூடுதல் ஆயுதங்கள், உணவு பொருட்கள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பு மூலம் வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பவும் இந்த சந்திப்பில் முடிவு செய்யபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலை காணப்படுவதால் இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கு பதிலாக தனது முகவர்கள் மூலம் வடகொரியாவின் ஊடாகவே சீனா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.