சர்வதேச தரவரிசை முன்னணி உயர்கல்வி பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்

0
77
Article Top Ad

உலகளவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த ‘டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த தரவரிசை பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னையை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்தது.

அதேபோல் கடந்த ஆண்டு 800-1000 இடத்துக்குள் இருந்த கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது 600-800 இடங்களில் இடம் பிடித்துள்ளது.