நியூசிலாந்து பொது தேர்தலில் போட்டியிடும் யாழ்.தமிழர்

0
65
Article Top Ad

நியூசிலாந்து நாட்டின் 54 ஆவது பொது தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் இலங்கை தமிழரான செந்தூரன் அருளானந்தம் மிகவும் கவனம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் நாளை பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஆளும் மற்றும் பிராதான எதிர்க்கட்சிக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகின்றது.

இரு கட்சிகளும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரியில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் இளம் வயதில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டவர் என்ற பெறுமையை ஜெசிந்தா ஆர்டன் பெற்றிருந்தார். அவரது ஆட்சி கட்டமைப்பு மிகவும் பாராட்டு பெற்றிருந்தது.

குறிப்பாக கொரோனா காலப்பகுதியில் அவர் முன்னெடுத்திருந்த கட்டுப்பாடு நடவடிக்கைள் உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்றிருந்தது.

எனினும், தனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும் என கூறி கடந்த ஜனவரி மாதம் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதமராகவும் பதவியேற்றிருந்தார்.

இந்நிலையிலேயே, அந்நாட்டில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாளை தேர்தல் இடம்பெறுவுள்ளது. ஆளும் கட்சியானதொழிலாளர் கட்சியை எதிர்த்து தேசிய கட்சி போட்டியிடுகின்றது.

இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சிறு கட்சிகளின் துணையுடன் பிரதான கட்சிகள் ஆட்யை கைப்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் இலங்கை தமிழரான செந்தூரன் அருளானந்தம் மிகவும் கவனம் பெற்றுள்ளார். பொறியியல் ஆலோசகரான இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் புனித ஜோன் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றுள்ளார். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இவர் கட்டுமான திட்ட பணிகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் இவர் வெற்றிபெருவார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.