ஆஸி.க்கு எதிரான போட்டியில் இருந்து தசுன் சானகவும் விலகல்; தலைமை பதவி குசல் மெண்டிச் வசமானது

0
108
Article Top Ad

நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாளைமறுதினம் திங்கட்கிழமை இலங்கை அணி அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், அணித் தலைவர் தசுன் ஷானகவும் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதீஷ பத்திரனவுக்கு வலது கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் குறைந்தது 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவுடனான போட்டியில் தசுன் ஷானக மற்றும் பத்திரன இருவரும் விளையாட மாட்டர்கள். இதனால் இலங்கை அணி சற்று பலம் குறைந்த அணியாகவே ஆஸியுடன் விளையாட உள்ளது.

தசுன் ஷானகவுக்கு வலது தொடையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவுஸ்ரேலியாவுடனான போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தசுன் ஷானக விளையாட வாய்ப்புள்ளதாகவும் இலங்கையின் அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆஸி.க்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.