விராட் கோலி அபார சதம் – வெற்றிநடைபோடும் இந்தியா

0
76
Article Top Ad

உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இது ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி பெற்றுக்கொண்ட 48வது சதமாகும்.

ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களுடன் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கின்றார்.

அவரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் இரண்டு சதங்களே தேவையாகவுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“2023 உலகக் கிண்ணம்“ – இந்திய அணிக்கு ‘257’ வெற்றி இலக்கு
2023 உலகக் கிண்ண தொடரில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 257 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

தொடரின் 17வது போட்டி புனேயில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பபெடுத்தாடியது.

இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்திய அணிக்கு 257 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.