இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், தற்பேது எந்த ஆபத்தும் வெகு தொலைவில் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் நிகழும் பூகோள அரசியல் கொந்தளிப்பைப் பற்றி விவாதிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது என்ன நடக்கிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், உலகமயமாக்கப்பட்ட உலகில் போரின் விளைவுகள் போர் நடக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, அதன் தாக்கம் வெகு தொலைவில் உள்ளது என்றார்.
சிறிய சம்பவங்கள் வெவ்வேறு பகுதிகளில் நடக்கின்றன, அதன் தாக்கம் மிகவும் தொலை தூரத்தில் உள்ளவர்ளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
போரையும் பயங்கரவாதத்தையும் இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் நம் அனைவருக்கும் அடிப்படை என்று ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவர் தனது இருப்பைக் காப்பாற்ற தனது ஆயுதமாக மாற்றினால், அது முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. தீவிரவாதம் என்று வரும்போது மெட்டாஸ்டாசிஸின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவது தவறாகும்.
தற்போதைய நிலையில் எந்த ஆபத்தும் வெகு தொலைவில் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு இந்தியா உதவி
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போருக்கு மத்தியில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா உதவியை அனுப்பியுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் C-17 Globemaster விமானம் எகிப்தின் அல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு சுமார் 6.5 தொன் மருத்துவ உதவி மற்றும் 32 தொன் பேரிடர் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், சுகாதார சேவைகள், நீர் சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
காசா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
இன்று அதிகாலை தெற்கு காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன், அதன் வடக்கே தாக்குதலை தீவிரப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் எரிபொருளுடன் போராடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவ அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதலில் 4,385 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேலிய வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சனிக்கிழமையன்று மத்திய லண்டனில் நடந்த பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100,000 பேர் கலந்துகொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.