புடினின் மரணம் குறித்து வதந்திகள்; ரஷ்யா மறுப்பு

0
72
Article Top Ad

”ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இறந்துவிட்டதாகவும், மாஸ்கோவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து வருகிறது” என்றும் டெலிகிராம் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

புடினுக்கு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாகவும் சில நாட்களுக்கு முன் குறித்த டெலிகிராம் சேனல் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இறந்துவிட்டதாகவும், “மாஸ்கோவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து வருகிறது” எனவும் அந்த சேனல் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அவரது நிர்வாகத்தைப் பற்றி தவறான தகவல்களை குறித்த இந்த டெலிகிராம் சேனல் பரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் 71 வயதான புடின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அல்லது இறந்துவிட்டார் என்று பல முறை குறிப்பிட்டுள்ளது.

புடினுக்கு மாரடைப்பு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டதாக வெளியான செய்திகள் “அபத்தமான தகவல்” என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஒரு ‘சதி’ நடந்து வருவதாகவும், புடினை போன்ற உருவம் கொண்ட ஒருவரை ஜனாதிபதியாக மாற்ற முயற்சிப்பதாகவும் டெலிகிராம் சேனல் குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யாவில் தற்போது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி இடம்பெறுகிறது. புடின் இன்று மாலை வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் மாஸ்கோ நேரப்படி 20.42 மணிக்கு உயிரிழந்தார்.

வைத்தியர்கள் மரணத்தை அறிவித்தனர். இப்போது வைத்தியர்கள் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புடினின் சடலத்துடன், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பேரவையின் செயலாளரான நிகோலாயிடம் தொடர்பு கொண்டு வைத்தியர்கள் அறிவுறுத்தல்களைப் பெறுகிறார்கள்.

புடினை போன்ற உருவம் கொண்ட மற்றைய நபருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

புடினின் மரணத்திற்குப் பிறகு அவரைப் போன்ற உருவம் கொண்ட நபரை ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.” என அந்த டெலிகிராம் இடுகையில் கூறப்பட்டது.

எவ்வாறாயினும, இந்த செய்தியை கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் முற்றாக மறுத்துள்ளார். புடின் நலமுடன் இருப்பதாகவும் பெஸ்கோவ் கூறியுள்ளார்.