DFC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி இலங்கை வருகிறார்

0
103
Article Top Ad

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஸ்காட் நதன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாளை 7ஆம் திகதி இலங்கைக்கு வரும் அவர் கொழும்பில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்திற்கான முக்கியமான உள்கட்டமைப்பை வழங்கும் கொழும்பு துறைமுகத்தில் புதிய முதலீட்டுக்கான நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகிறார்.

பிரஜைகள் அபிவிருத்தி வர்த்தக நிதியத்துடன் முதலீட்டு உறுதிப்பாட்டிற்கான கையொப்பமிடும் நிகழ்விலும் நதன் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும், அவர் நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.