தைவான் விவகாரத்தில் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் ஒன்றிணைய வேண்டும்

0
55
Article Top Ad

தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு வா‌ஷிங்டன்னும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல் நடவடிக்கைகள் இடம்பெற வா‌‌ஷிங்டன் உறுதுணையாக இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜப்பான், தென்கொரிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த கருத்தை ஜேக் சல்லிவன் வெளியிட்டுள்ளார்.

சீனா, தைவான் நீரிணையில் அவ்வப்போது அதன் இராணுவக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்புகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

தைவானை தன்னுடைய இடம் என்று கூறும் சீனா, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இலக்கு கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு வாக்கில் அதற்கான முழு நடவடிக்கையை சீனா எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்கா தைவானுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்திவருகிறது.