இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிக்கு அமெரிக்கா வரவேற்பு!

0
59
Article Top Ad

இலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர் கிடைக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நடவடிக்கை மூலம், நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மறுமலர்ச்சிக்கான பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து தமது ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாம் மதிப்பாய்வு கூட்டம் நிறைவுற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதிய இலங்கைக்கான கடன் திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிப்படைத்தன்மையுடைய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்