காதலியை கொலை செய்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்:… 10 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலை..!

0
91
Article Top Ad

 

காதலியை கொடூரமாக கொலைசெய்த குற்றத்திற்காக 9வருட சிறைத்தண்டனை அனுபவித்துவந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல பராலிம்பிக் சம்பியன் தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இன்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து கடும் நிபந்தனைகளைக் கொண்ட வீட்டு வாழ்க்கைக்காக விடுவிக்கப்படவுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வரும் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் பிரிடோரியாவிலுள்ள தனது மாமாவின் ஆடம்பரமாளிகையில் கடுமையான நிபந்தனைகளுடனான வீட்டு வாழ்க்கையை முன்னெடுப்பார் எனவும் 2029ம் ஆண்டுவரை கடுமையான அவதானிப்பிற்குள் அவரது செயற்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

காதலியை கொலை செய்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்:

கடந்த 2013-ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க வீரர் ஸ்கார் பிஸ்டோரியஸ் தனது சொந்த வீட்டிலேயே காதலி ரிவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார். திருடன் என்று தவறாக நினைத்து தான் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிஸ்டோரியஸ் கூறினார். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர வைத்தது.

13 ஆண்டுகள் சிறைத்தண்டனை:

இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையில் பிஸ்டோரியஸ் குற்றமற்ற கொலைக்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர்  3 டிசம்பர் 2015 அன்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் வழக்கறிஞர்களால் கோரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் 2017ல் உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை 13 ஆண்டுகள் 5 மாதங்களாக இருமடங்காக உயர்த்தியது.

பரோலில் விடுதலை:

இதற்கிடையில் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோல் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கடந்த நவம்பர் மாதம் 24ம்திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்கார் பிஸ்டோரியஸ் -க்கு பரோல் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கார் பிஸ்டோரியஸ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். 13 ஆண்டு தண்டனையில் பிஸ்டோரியஸ் பாதி தண்டனையை முடித்துள்ளார்.இந்த நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை அவர் பரோலில் வெளியே வரவுள்ளார்


Parole என்றால் என்ன?

பொதுவாக பரோல் (Parole) அல்லது  சிறைவாச விடுமுறை என்பது சிறைச்சாலையின் சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்ட ஒரு சிறைக்கைதியை, தன் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மட்டும் சிறைச்சாலையிலிருந்து வெளியே அனுமதிக்கும் தற்காலிக விடுவிப்பாகும். இந்த தற்காலிக சிறை விடுவிப்பு (பரோல்) நாட்கள், மொத்த சிறைத்தண்டனை காலத்திலிருந்து கழிக்கப்படாது. ஆனால் பரோல் விடுவிப்பு காலத்திற்கு சிறைதண்டனை காலம் நீளும்.

பொதுவாக சிறைக்கைதி சிறைச்சாலைக்கு வந்து வெளியே கலந்து கொள்ள வேண்டிய முக்கியமாக நிகழ்வுகளுக்காக மட்டும், (குறிப்பாக மரணம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு) பரோல் விடுவிப்பு வழங்கப்படும். பரோல் விடுவிப்பு எந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது நிகழ்வுகளுக்கு கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டாரோ அவைகள் தவிர வேறு எந்த நிகழ்வுகளில் அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது. பரோலில் வெளி வந்த சிறைக்கைதி, சிறைச்சாலை கூறும் குறிப்பிட்ட காவல்நிலையத்தில் அன்றாடம் சென்று கையொப்பம் இடவேண்டும்.

என்ன செயல் செய்வதற்கு சிறைவிடுப்பில் வெளியே வந்த சிறைக்கைதி, அதைத் தவிர வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், பரோல் விடுவிப்பை ரத்து செய்து மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்.

————————————————————

.