இலங்கையின் மும்மொழிக் கொள்கையை மதியுங்கள்: தமிழ் மொழியைத் தவிர்த்த நிறுவனத்தினம் சீனத்தூதரகம் கோரிக்கை

0
524
Article Top Ad

கொழும்பு துறைமுக நகர் பகுதியிலுள்ள அறிவித்தல் பலகையொன்றில் தமிழ் மொழியைத் தவிர்த்த சீன நிறுவனத்திடம் இலங்கையின் மும்மொழிக் கொள்கையை மதித்து நடக்குமாறு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கோரியுள்ளது.

அறிவித்தல் பலகைகளை நிறுவும் போது இலங்கையிலுள்ள உத்தியோகபூர்வ மொழிக் கொள்கைகளை சீன நிறுவனங்கள் தவிர்த்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையிலேயே சீனத்தூதுவரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

தாம் இலங்கையின் மும்மொழிக் கொள்கையை மதிப்பதற்கு உதாரணமாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பெயர்படிகையையும் 600 ஆண்டுகள் பழமையான ஷெங் கல்லறை படிமத்திலுள்ள எழுத்துக்களையும் சீனத்தூதரகம் உதாரணமாக காண்பித்துள்ளது. அங்கே தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.