இசைஞானியின் மகளுக்கு இலங்கை மண்ணில் இரங்கல்

0
235
Article Top Ad

இந்திய பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் மறைவுக்கு இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வு இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபாசெயலாளர் மாலன் தர்மேந்திரா தலைமையில் கொழும்பு சுதர்ஷி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் இசைக் கலைஞர்கள், சிங்கள இசை கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.