நவல்னியின் மரணம் – புடினை குற்றம் சுமத்திய பைடன்

0
51
Article Top Ad

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அடியாட்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி, புட்டினைக் கடுமையாக விமர்சித்தவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவல்னி, பெப்ரவரி 16ஆம் திகதி இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பைடன்,

நவல்னி சிறையில் இருந்தபோது மரணத்தின் பிடியில் சிக்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.

”நவல்னிக்கு என்ன நடந்ததென மறைக்கப்பட்டிருந்தாலும் அவரது மரணத்துக்கு புடினும் அவரின்கீழ் செயல்படுபவர்களும்தான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஷ்ய அதிகாரிகள் வேறு கதை சொல்லப்போகின்றனர். அதில் சந்தேகம் வேண்டாம். நவல்னியின் மரணத்துக்கு புடினும் அவரது அடியாட்களும்தான் காரணம்.” எனவும் பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.

புடினின் ஆட்சியில் ஊழல், வன்முறை தலைவிரித்து ஆடுவதாகவும் அதை மிகத் துணிச்சலுடன் நவல்னி எதிர்த்தார் என்றும் பைடன் அஞ்சலி கவலை வெளியிட்டுள்ளார்.