டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

0
69
Article Top Ad

டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , முகநூல் மக்களின் எதிரி எனவும் வர்ணித்துள்ளார்.

எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் என தெரிவித்த டிரம்ப், ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அதேவேளை டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார் எனினும் தனது முடிவை தற்போது மாற்றியுள்ளார்.

ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால் காங்கிரஸே அதனை செய்யவேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால் அது முகநூலை பெரியவிடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்;கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.