பிரித்தானியாவில் புகலிடம் கோரியவர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தல்

0
101
Article Top Ad

புகலிடக் கோரிக்கையாளர்களை வசந்த காலத்தில் ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடங்கும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்த சட்டமூலம் தற்போது விவாதிக்கபடுவதாகவும் திட்டத்திற்கான உரிய காலக்கெடுவும் இதன்போது தீர்மானிக்கப்படும் எனவும் சுனக் கூறியுள்ளார்.

“ருவாண்டா திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவது முக்கியம். ஏனென்றால் (சட்டவிரோத குடியேற்றத்திற்கு) எங்களுக்கு ஒரு தடுப்பு இருக்க வேண்டும்.

நான் இதில் உறுதியாக இருக்கிறேன். வசந்த காலத்தில் இதற்கான விமானத்தை இயக்கவும் எதிர்பார்க்கிறேன்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.