இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கொவிட் தொற்றுக்கு முந்தைய போக்கை விட சுமார் 25% குறைவாக உள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டதாலேயே இன்னமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமான நிலையில் உள்ளது.
அண்மைக்காலமாக சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும் இன்னமும் இலங்கையின் பொருளாதார அபாயத்திலேயே உள்ளது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford Economics) தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மீண்டு வருகிறது
இலங்கை பற்றிய அவர்களின் சமீபத்திய கணிப்புகளின்படி, இலங்கையில் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை பலனைத் தரத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் இன்னும் கணிசமான அக்கறை தேவை என்றும் ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கூறுகிறது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் திட்டமிடப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டிய நிலைமை உள்ளமை மற்றும் ஐ.எம்.எப். (IMF) திட்டத்தின் விதிமுறைகளை, குறிப்பாக நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவை பொருளாதாரத்துக்கு சவாலானதாக இருக்கும் என்றும் ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலாத்துறை மீண்டு வருவதால், பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிய நடவடிக்கைகளில் பாய்ச்சல்கள் உள்ளன. பற்றாக்குறையை குறைக்கும் அதே வேளையில் சேவைகள் செயல்பாடுகளை மேம்படுத்துவது அவசியமாகும்.
Oxford Economics, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை எட்டும் என்றும் 2024 இல் 1.5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறது என்றும் கூறியுள்ளது.