ஈஸ்டர் ஞாயிறு – கிறிஸ்தவ தேவாயலங்களில் பலத்த பாதுகாப்பு

0
58
Article Top Ad

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்களைச் சுற்றி 10,000 க்கும் மேற்பட்ட படையின் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

”ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

6,837 பொலிஸார், 470 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,900 வரையான ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.“ என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

118, 119, அல்லது 1927 என்ற இலக்கத்திற்கு தகவல்களை பெற அல்லது வழங்க அழைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் 300 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஈஸ்டர் ஞாயிறு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். இம்முறை கடந்த காலங்களைவிட பாதுகாப்பு சற்று அதிகமாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.