காசாவில் போருக்கு மத்தியில் ரமழான் பெருநாளை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்வரும் 11ஆம் திகதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.
என்றாலும், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகள் காசாவில் உள்ள மக்களுக்கு இம்முமை ரமழான் பரிசு பொருட்களை அனுப்பியுள்ளதுடன், நிவாரணப் பொருட்களையும் அனுப்பியுள்ளன.
இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் காசா பகுதியில் பாடசாலையொன்றை நிர்மாணித்துக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பாலஸ்தீன அரசின் அழிவை இலங்கை ஒருபோதும் ஆதரிக்காது என்று கூறிய ஜனாதிபதி, இந்தப் போரை நிறுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
கண்டி, கட்டுகல்லே ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
காசா பகுதியில் மிகவும் சோகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் முப்பத்தைந்தாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தேசிய ரமழான் நிகழ்வை நடத்தாமல் குறித்த நிதியை காசாவில் சிறுவர்களின் நலனுக்க வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.