காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 11 பேர் பலி: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம்

0
19
Article Top Ad

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஃபாவில் உள்ள யாப்னா அகதிகள் முகாமில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 04 குழந்தைகள் உட்பட 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய குடியேற்றத் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெவித்துள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கும் நிறுவனங்களை உலகெங்கிலும் உள்ள பலஸ்தீனியர்களுக்கான ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களினூடாக முற்றுகையிட்டு வருகின்றனர்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க 32 நாடுகளை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி முதல் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலிலிருந்து போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் காரணமாக 34,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 76,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.