கொரோனாவல் அதிக பட்சமாக 80 லட்சம் பேர் வரை பலியாகியிருக்கலாம் – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித்தகவல்

உத்தியோகபூர்வ எண்ணிக்கைப்படி உலகம் முழுவதும் கொரோனாவினால் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை அதிகாரப்ப்பூர்வ எண்ணிக்கைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0
315
Article Top Ad

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ தகவல்களுக்கு அமைவாக 34 லட்சம் பேர் எனச் சுட்டிக்காட்டினாலும் உண்மையாக பலியானவர்கள் எண்ணிக்கை அதனை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஏனைய முறைசாரா மதிப்பீடுகளுக்கு அமைவாக உண்மையாக கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார கட்டமைப்புக்களின் உச்சப் பயன்பாட்டு எல்லையை கொரோனா வைரஸ் பரவல் வேகத்தின் தாக்கம் சவாலுக்குட்படுத்துவதால் இறந்தவர்களை உரிய முறையில் பரிசோதனைக்குட்படுத்தாமை தரவுகளை உரிய முறையில் ஆவணப்படுத்தாமை

கொரோனா காலத்தில் ஏனைய நோய்களால் இறந்தவர்களை ஆவணப்படுத்தாமை என பல்வேறு காரணங்களால் உண்மையாக கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உலக முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில் 34, 59,294 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா இரண்டாம், மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியா பிரேசிலில் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தடுப்பூசி செலுத்துவதில் பாரப்பட்சம்

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.