மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியல் வெளியீடு: 2ஆம் இடத்தை பிடித்த இலங்கை

0
165
Article Top Ad

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://timesofindia.indiatimes.com/travel/web-stories/most-popular-travel-destinations-in-asia/photostory/110390449.cms