T20 உலக்கிண்ணத்தின் ஒன்பதாவது அத்தியாயம் இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய ஆரம்பப்போட்டியில் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள டலஸ் நகரில் நடைபெறவுள்ளது.
உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றிருக்கும் என்பதே பலரது எண்ணமாக இருக்கும். ஆனால் 1844ம் ஆண்டில் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டி கனடா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையிலே இடம்பெற்றது.
இம்முறை T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி அமெரிக்காவின் டலஸ் நகரில் நடைபெறுகின்றது. 1844ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது போட்டியில் கனடா அணி வெற்றிபெற்றபோதும் தற்போதைய நிலைவரப்படி அமெரிக்க அணியே வலுவானதாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 தொடரில் அமெரிக்க அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.