கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இஸ்ரேல்

0
54
Article Top Ad

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில்,போரில் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய காரணத்தால் இஸ்ரேலை கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

மோதலில் குழந்தைகளின் உரிமைகளை மீறுபவர்களின் “அவமானப் பட்டியலில்” இஸ்ரேலை சேர்த்தமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் நடவடிக்கை நியாயமானது என
மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

எவ்வாறாயினும் கறுப்பு பட்டியலில் சேர்த்திருக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்டை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஹமாஸின் அபத்தமான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னை வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்த வெட்கக்கேடான தீர்மானத்தால் தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன்” என் இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையிக் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அண்மைய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக
எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.