பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதையடுத்து டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிப் பெற்றுள்ளது.
அமெரிக்கா, நியூயார்க்கில் நேற்று(10.06.24) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் 46 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசன் சகிப் 3 விக்கெட்டுக்களையும் டஸ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
114 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் 37 ஓட்டங்களையும், மஹ்முதுல்லா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் கேஷவ் மஹராஜ் 03 விக்கெட்டுகளையும், ரபாடா, அன்ரிச் நோக்கியா ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசென் தெரிவு செய்யப்பட்டார்.