இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரேயொரு நபரான கெளதம் கம்பீர் இன்று (18) நேர்காணலை எதிர்கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கம்பீரை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்யவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே, சுலக்ஷனா நாயக் ஆகியோர் கெளதம் கம்பீர் நேர்காணல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையில், கம்பீர் தலைமை பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டால் அவரின் பதவிக்காலம் 2027 இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனக்கு தேவையான பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோருடன் கம்பீர் தொடர்ந்து பணியாற்ற மாட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, புதிய இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.