லித்தியம் மின்கலத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 22 பேர் உடல் கருகி பலி

0
28
Article Top Ad

தென்கொரியாவின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரிலுள்ள லித்தியம் மின்கலம் (Battery) தயார் செய்யும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், திடீர் தீ விபத்தில் ஊழியர்கள் பல பேர் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மிகுந்த போராட்டத்தின் மத்தியில், தீயை அணைத்துள்ளனர்.

மேலும் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணி மும்முரமாக ஈடுபட்டதையடுத்து, சிலர் மீட்கப்பட்டனர்.

சுமார் 35000 யூனிட்கள் கொண்ட கிடங்கிற்குள்ளிருந்த மின்கலச் செல்கள் வெடித்ததைத் தொடர்ந்து காலை, 10.31 மணியளவில் தீப்பரவல் ஆரம்பமாகியுள்ளது. ஆனால், இந்த வெடிப்பிற்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏனைய தொழிலாளர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. சில வேளைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.