பிரமாண்டமாய் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தயார் – சீனாவின் திட்டம் வெளியானது

0
52
Article Top Ad

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 25ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், பல நாடுகளும் தங்களின் போட்டியாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்துவருகின்றனர்.

அந்தவகையில் , குறித்த ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது, சீனா தங்களின் நாட்டிலிருந்து 42 ஒலிம்பிக் சாம்பியன்களையும் 405 விளையாட்டு வீரர்களையும் வரவழைக்கும் என அறிவித்துள்ளது.

சுமார் 716 பிரதிநிதிகள் கொண்ட அதிகார்ப்பூர்வ குழு இதனை கலந்தாலோசித்து அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த தசாப்தங்களில் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், சீன விளையாட்டு துறையும் உலக அளவில் புகழ்பெற்று உயர்ந்துள்ளதை தற்போது பிரதிபளிக்கின்றது.

சீனா கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு 431 விளையாட்டு வீரர்கள் உட்பட அதன் மிகப்பெரிய 777 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பியது.

அதன்போது மொத்தம் 89 பதக்கங்களைப் பெற்றது. அதில் 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இம்முறையும் அதேபோன்று தங்களின் திறமைகளை மிகவும் ஆர்வத்துடனும் திறமையுடனும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.