அர்ச்சுனா இல்லை ராஜீவ் தான் வைத்திய அத்தியட்சகர்: சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

0
157
Article Top Ad

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக வைத்தியர் ராஜீவ் தற்போது கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.