சஞ்சு சாம்சன் நீக்கம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் கடும் குற்றச்சாட்டு

0
46
Article Top Ad

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை ‘அபத்தமான முறையில்’ நீக்கியதற்காக இந்திய கிரிக்கெட் சபையை முன்னாள் கிரிக்கெட் வீரர் கடுமையாக சாடியுள்ளார்.

ஜூலை 27ஆம் திகதி தொடங்கும் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இதில் ஒருநாள் போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகின்றார். அதேசமயம் விராட் கோலியும் ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளார்.

மேலும், T20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் T20 போட்டிகளின் போது சுப்மன் கில் துணை தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், T20 போட்டிகளில் உள்வாங்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Shivam Dube in place of Sanju Samson in the ODIs is ridiculous. Poor Sanju scored a century in his last series against SA. Why him always? My heart goes out to this young man #SLvIND

— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) July 18, 2024
ஐபில் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக செயற்படும் சஞ்சு சாம்சன் இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

56.66 சராசரியில் 510 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.