கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: பைடன் விலகிய நிலையில் ட்ரம்ப் கருத்து

0
51
Article Top Ad

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தை தெரிவித்தார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸை தேர்தலில் வீழ்த்துவது எளிதாக இருக்கும் என தான் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலுக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து, அது குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஹாரிசன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அக்கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வேண்டும் என அவருக்கு ஆதரவாக பலரும் சொல்லி வருகின்றனர்.