போதிய உடற்தகுதி இருக்கும் பட்சத்டதில் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா விளையாட முடியும் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் முடிவடைந்த பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் தமது T20 போட்களில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் குறித்த இருவரும் விளையாடுவார்கள் என இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அறிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே, கவுதம் கம்பீர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
“50 ஓவர் அல்லது 20 ஓவர் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி விரைவில் வருகிறது. அவுஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்”
இந்நிலையில், போதிய உடற்தகுதி இருக்கும் பட்சத்டதில் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் குறித்த இருவரும் விளையாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விராடட மற்றும் ஷர்மா இருவரும் T20 போட்டிகளில் இனி விளையாட மாட்டார்கள். எனினும், அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.