இந்திய அணியியுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு!

0
46
Article Top Ad

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நேற்று இலங்கையை வந்தடைந்திருந்தது .

அதன்படி 03 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரவு 07:00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து, 50 ஒவர் கொண்ட ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய மூன்று தினங்களில் மதியம் 02.30 மணிக்கு கொழும்பு கேட்டராம சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம் பின்வருமாறு.

சரித் அசலங்க (அணித்தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெந்திஸ்
குசல் ஜனித் பெரேரா
கமிந்து மெண்டிஸ்
தசுன் சானக்க
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
மதீஷ பத்திரன
நுவன் துஷார
துனித் வெல்லாலகே
துஷ்மந்த சமீர
பினுர பெர்னாண்டோ
தினேஷ் சந்திமால்
அவிஷ்க பெர்னாண்டோ
சமிந்து விக்கிரமசிங்க