புதிய பொலிஸ்மா அதிபர்: ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவரா?

0
40
Article Top Ad

பதில் பொலிஸ்மா அதிபராகச் செயல்பட்ட தேசபந்து தென்னகோன் தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கிய உத்தரவின் பிரகாரம் வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பதிநாயக்க மித்தெனிய கனிஷ்ட கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த உயர் அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசாரணைகுழுவினால் அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ்மா அதிபரின் நியமனம் அல்லது இதுதொடர்பான விடயங்கள் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்காதென சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

என்றாலும், பொலிஸ்மா அதிபர் ஒருவர் இன்றி ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விட முடியாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தாக அறிய முடிகிறது.