ஹமாஸின் உயர்மட்ட தலைவர் ஈரானில் படுகொலை

0
43
Article Top Ad

ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் ஹனியேவும் அவரது மெய்க்காப்பாளர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டதாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் கூறியதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் ஒரு அறிக்கையில் அவர் “தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்” கொல்லப்பட்டதாகக் கூறியது.

படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை,

எனினும், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹனியாவின் மூன்று மகன்கள் காஸாவில் உள்ள உயர்மட்ட இலக்குகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் ஹமாஸ் இராணுவச் செயற்பாட்டாளர்கள் என்றும் மூன்றாவது ஒரு தளபதி என்றும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.