பதற்றத்தில் மத்திய கிழக்கு: ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம்

0
37
Article Top Ad

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில், தொழுகைக்கு பின்னர் தெருக்களில் பொது மக்கள் அணிவகுத்து நின்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் ஐ.நா பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.