கமாலா ஹாரிஸின் பாரம்பரிய புகைப்படத்தை பகிர்ந்த ட்ரம்ப்: திடீர் புகழாரம்

0
39
Article Top Ad

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிராதான வேட்பாளர்களான

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இடையேயான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும் இடையிலான தேர்வாகவும் கமலா ஹாரிஸ் சித்தரித்திருந்தார்.

இதன்போது, எதிர்ப்பாளரான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்பை தான் வழக்குத் தொடுத்ததாகக் கூறிய மோசடியாளர்களுடனும் ஒப்பிட்டுருந்தார்.

இதன்பின்னர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கறுப்பா என்று கேள்வி எழுப்பியமை பெரும் சர்ச்சையாக மாறியது.

சிகாகோவில் இடம்பெற்ற தேசிய கருப்பு பத்திரிக்கையாளர் மாநாட்டில் கமலா ஸாரிஸ் தொடர்பில் ட்ரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

“நான் அவளை நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன், அவள் எப்போதுமே இந்திய பாரம்பரியத்தை உடையவள், அவள் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தாள்” என கூறினார்.

“சில வருடங்களுக்கு முன்னர் அவள் கறுப்பாக மாறியபோது அவள் கறுப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது, இப்போது அவள் கறுப்பாக அறியப்படுகிறாள்,” என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், தற்போது அவர் கமலா ஹாரிஸின் “இந்திய பாரம்பரியத்தை” காட்டும் ஒரு படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

“பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய அருமையான படத்திற்கு நன்றி கமலா! உங்களின் அரவணைப்பு, நட்பு மற்றும் உங்கள் இந்திய பாரம்பரியத்தின் மீதான அன்பு மிகவும் பாராட்டப்பட்டது” என்று டிரம்ப் ட்ரூத் சமூக வலைத்தள புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இனம் குறித்து சர்ச்சைக் கருத்தை வெளியிட்ட அவர் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.