பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததாக பங்களாதேஷ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்திருந்தனர். அதன்படி, இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் மொத்தமாக 350 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 50 தொகுதிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைப்படி அரசியல் கட்சிகளின் பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் அரசியல் போட்டியாளரான முஹம்மது யூனுஸ், மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் ஆகிய கருத்துக்களுக்கு முன்னோடியாக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
மேலும் இராணுவ ஆட்சியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது