நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024: யார் அதிக தங்கப்பதக்கத்தை வென்றது?

0
29
Article Top Ad

ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் மிகவும் கோலாகலமாக பாரிஸின் சீன் நதி பாரம்பரியத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பல விமர்சனங்களையும் தாண்டி 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது.

இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றன.

மேலும், தற்போதைய நிலவரப்படி இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

126 பதக்கங்களை ஐக்கிய அமெரிக்கா பெற்றுள்ளது.

அதில் 40 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமையும் சுட்டிக்காட்டதக்கது.

தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும், அவுஸ்திரேலியா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.

பதக்க பட்டியலில் இந்திய நாட்டு வீர வீராங்கனைகள் 1 வெள்ளி , 5 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 6 பதக்கங்களை பெற்று 71ஆவது இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது,