அரசுக்கு எதிராகப் பேராயர் போர்க்கொடி!      

0
272
Article Top Ad

 

இலங்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட வந்த குழுவினர், நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று  குற்றஞ்சாட்டினார்.

இலங்கை எதை நோக்கிப் பயணிக்கின்றது, யார் நாட்டை ஆட்சி செய்கின்றனர், யாரால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பன சிக்கல் மிக்கதாக மாறியுள்ளன எனவும் அவர்  குறிப்பிட்டார்.

நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வது அபிவிருத்தியல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதைத் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டு வளங்களை விற்பனை செய்வது இலகுவான விடயமாக இருக்கும். எனினும், இந்த நாட்டுக்கென்று ஒரு கௌரவம் இருக்கின்றது.

நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தரப்பினரினதும் பொறுப்பாகும்.

எம்.சி.சி. ஒப்பந்தத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கு தற்போதைய அரசில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால், இன்று, எம்.சி.சியைவிட அபாயமான ஒன்றை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அனைத்தும் வீணாகிப் போயுள்ளது” – என்றார்.
……