எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: திகதி அறிவிப்பு

0
157
Article Top Ad

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளன.

1. ஜனசேத பெரமுன
2. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
3. ஐக்கிய மக்கள் சக்தி
4. பொதுஜன ஐக்கிய முன்னணி
5. பொதுஜன ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு
6. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
7. தேசிய மக்கள் சக்தி
8. தேசிய மக்கள் கட்சி
9. இரண்டாம் தலைமுறை கட்சி

இதேவேளை, 02 சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளதுடன் கட்டுப்பணம் செலுத்தியிருந்த மக்கள் காங்கிரஸ் தமது வேட்பு மனுவை சமர்ப்பிக்கவில்லை.