இந்தியா – மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன எனவும் மாலைத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ மாலைத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, ஜனாதிபதி முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
எங்கள் அரசின் ஆரம்ப காலத்தில், இந்தியாவுடன் கசப்பான உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியா – மாலைத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன.
சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலைத்தீவை ஆதரிக்கின்றன’ இவ்வாறு மாலைத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார்.