ஜனாதிபதி தேர்தலின் பின்னரான வன்முறைகள்: பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

0
5
Article Top Ad

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டும் தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவித்துள்ள அவர் வன்முறைகள் அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

18 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து பிரசாரங்களும் நிறுத்தப்படவேண்டும்,18 ஆம் திகதிக்கு பின்னர் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சமூக ஊடக பக்கங்களிற்கும் இது பொருந்தும், மீறல்களில் ஈடுபடுபவர்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்வேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here