லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டாவது நாளாக பதிவான வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனான் – அதன் கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.
செவ்வாயன்று ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்ததில் கொல்லப்பட்ட 12 பேரில் சிலரின் இறுதிச் சடங்குகளின் போது சில குண்டுவெடிப்புகள் நடந்தன.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டினார். எனினும், இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant போரின் ஒரு புதிய கட்டத்தை அறிவித்த போதும், இஸ்ரேலிய இராணுவப் பிரிவு வடக்கே மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதும் தாக்குதல்கள் நடந்தன.