மழையால் பாதிக்கப்பட்ட டெஸ்ற் கிரிக்கட் போட்டியை வெற்றி கொள்ள இந்தியா எடுத்த ‘ ‘பிரம்மாஸ்திரம்’ ?

0
46
Article Top Ad

கான்பூரில் நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

இதுவரை இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெல்ல முடியவில்லை என்ற வரலாறு பங்களாதேஷ அணிக்குத் தொடர்கிறது. அதேசமயம் இந்திய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

உலகக் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை(1994-2000, 2004-2008) பெற்றுள்ளது.

உள்நாட்டு போட்டிகளில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பின் இதுவரை 12 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணி கோட்டைவிடவில்லை.

2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள்(இன்று) ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது.

முதல் 3 நாட்கள் வரை 2வது டெஸ்ட் போட்டி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் 3 நாட்களில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மற்றும் இன்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் இந்திய அணி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 312 பந்துகளை மட்டுமே சந்தித்து. டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணி குறைவான பந்துகளைச் சந்தித்து அடைந்த அடைந்த வெற்றிகளில் இது இரண்டாவது ஆகும். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 281 பந்துகளைச் சந்தித்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 180 ஓவர்களுக்கும் குறைவாக அதாவது 173.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்னும் ஒன்றரை செஷன் மீதமிருக்கும் நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.