ஜோ பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

0
44
Article Top Ad

 

 

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமளவிலான காலப்பகுதியே உள்ள நிலையில் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டிளுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது ,’இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம். நான் அதிபராக இருந்தபோது ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு எப்போதும் பணநெருக்கடி இருந்தது. இதனால் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி ஆனது முதல் ஈரானுக்கு பணத்தை வாரி இறைத்தார். இதனால் அவர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றனர்.

எனது ஆட்சி காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் என்பது இல்லை. இந்த நாட்டை வழிநடத்த திறமையில்லாத இருவரால் உலகம் இப்போது மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.