இஸ்ரேல்-ஈரான் மோதல்: எந்த நாடு யார் பக்கம்?-

0
25
Article Top Ad

 

ஒக்டோபர் 1-ஆம் திகதி இரவு இஸ்ரேல் மீது ஈரான்ரான் சுமார் 200 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே இஸ்ரேல் ஹெஸ்பொலா இடையிலான மோதலும் அதிகரித்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு பிறகு, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா மேலும் தெளிவுப்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இந்த பிராந்தியத்தில் நிலைமை மோசமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் -ஹமாஸ் இடையே, கடந்த ஓராண்டாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காஸா மற்றும் மேற்கு கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப நாட்களில், இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தீவிரமாக தாக்க தொடங்கியுள்ளது. லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.

அரபு நாடுகள் உட்பட உலகில் உள்ள பல நாடுகள் இந்த விவகாரத்தில் இரண்டாக பிளவுப்பட்டு நிற்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் கொலை செய்யப்பட்டார்.

ஹனியே 1980 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வந்துள்ளார்.

செப்டம்பர் 28-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தனது தலைவர் ஹசன் நஸ்ரல்லா இறந்ததை உறுதி செய்தது. அதன் பிறகு மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா தளங்களை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது.

தற்போது ஹெஸ்பொலா தளங்களை இலக்காகக் கொண்டு தரை வழி ராணுவ தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.

ஹனியே இறந்த பிறகு, இஸ்ரேல் மீதான நேரடி தாக்குதல் எதையும் இரான் நிகழ்த்தவில்லை. ஆனால் அக்டோபர் 1-ஆம் தேதி இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மத்திய கிழக்கு மோதலை தீவிரமாக்கியது.

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்க, இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்குமாறு இரான் ஏற்கெனவே அந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மறுபுறம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு இந்தப் போரில் உதவி வருகின்றன.

இரானின் சமீபத்திய தாக்குதல்களை தொடர்ந்து, நெதர்லாந்து அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எக்ஸ் சமூக ஊடகத்தில், இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடன் மோதிக் கொண்டிருந்தனர்.2 அக்டோபர்

அரபு நாடுகளின் ஆதரவு யாருக்கு?

அரபு உலகில் சுன்னி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகள், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் லெபனானின் இறையாண்மை குறித்து பேசி வருகின்றனர்.

செளதி அரேபியா

நான்கு மாதங்களுக்கு முன்பு, காஸாவின் ரஃபாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, பாலத்தீனின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று செளதி அரேபியா கூறியிருந்தது. அந்த காலக்கட்டத்தில் செளதி அரேபியாவின் கூற்று மிக முக்கியமானதாக கருதப்பட்டது.

ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்கு பின், சுன்னிகள் தலைமையிலான செளதி அரேபியா, லெபனானில் நடைபெறுவது மிகுந்த கவலைக்குரியது என்று தெரிவித்திருந்தது.

லெபனானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செளதி பேசியிருந்தது. ஆனால் நஸ்ரல்லா குறித்து குறிப்பிடவில்லை.

பாலத்தீனர்களின் போராட்டத்திலிருந்து விலகி நின்றால் இந்த பிராந்தியத்திலும் உலக அளவிலும் தனது பிம்பம் பாதிக்கப்படும் என்று செளதி தலைமை கருதுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மெக்கா, மதீனா காரணமாக இஸ்லாமியர்களுக்கு செளதி அரேபியா புனித தலமாக இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செளதி அரேபியாவை தலைமையகமாக கொண்டுள்ளது. அது செளதி அரேபியாவால் வழி நடத்தப்படுவதாக கருதப்படுகிறது.

இப்படியான சூழலில், தனது போக்கு தனது பிம்பத்தை பாதிக்கும் என்று செளதி கருதுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம்

சுன்னிகள் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை ஹசன் நஸ்ரல்லாவின் இறப்பு குறித்தும், அதன் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் முற்றிலும் மௌனமாக இருக்கிறது.

கத்தார் மற்றும் பஹ்ரைனும் இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கின்றன.

எனினும், ஆறு வளைகுடா நாடுகள்– பஹ்ரைன், ஓமன், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகியவற்றின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், லெபனானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் லெபனான் – இஸ்ரேல் எல்லையில் போர் நிறுத்தம் வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அதோடு, லெபனான் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஆயுதங்களும் இருக்கக் கூடாது, வேறு எந்த நாட்டின் நிர்வாகமும் அந்தப் பகுதியில் இருக்கக் கூடாது என்றும் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம்: யார் யாருடன் நிற்கிறார்கள்?
மத்திய கிழக்கில் நடைபெற்றும் வரும் மோதலில், கத்தார் எல்லா தரப்பினரிடமும் பேசி மோதலை நிறுத்துவதற்கு முயல்கிறது.

கத்தார் இஸ்ரேலுடன் எந்தவித அதிகாரபூர்வ உறவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் இதை செய்கிறது.

நஸ்ரல்லாவின் இறப்புக்கு பின், எகிப்து அதிபர் அப்தல்-ஃபத்தா அல்-சிசி லெபனான் பிரதமர் நஜிப் மிகாதியிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தார்.

நஸ்ரல்லாவின் பெயரை குறிப்பிடாத அவர், லெபனான் இறையாண்மையை அத்துமீறும் எந்தவொரு செயலையும் எகிப்து கண்டிக்கிறது என்று கூறினார்.

இரானின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எகிப்து கொண்டுள்ளது. எனினும் இரான் அரசுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை எகிப்து நடத்தி வருகிறது.

நஸ்ரல்லா கொலை செய்யப்பட்ட பிறகு, எகிப்து அதிபர், அந்த பிராந்தியம் முழுவதுமே சிக்கலான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். எப்படியானாலும் அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜோர்டான்
அரபு நாடான ஜோர்டான், மேற்கு கரையின் எல்லையில் இருக்கிறது, இங்கு அதிக எண்ணிக்கையிலான பாலத்தீன அகதிகள் வசிக்கின்றனர்.

இஸ்ரேல் உருவான போது, இங்கிருந்த மக்கள் பலரும் ஜோர்டானுக்கு தப்பி சென்றனர். இந்தப் போரில் ஜோர்டான் பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று ‘இரு நாடுகள்’ தீர்வு குறித்து பேசுகிறது.

துருக்கி

துருக்கி மற்றும் இஸ்ரேல் 1949-ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜிய உறவுகளை தங்களுக்கு இடையே கொண்டுள்ளன. இஸ்லாமியர்கள் பெருவாரியாக உள்ள நாடுகளில், இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடு துருக்கியாகும்.

எனினும் துருக்கி இஸ்ரேல் உறவு 2002-ஆம் ஆண்டு முதல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பாலத்தீன விவகாரத்தில் துருக்கி எப்போதுமே இஸ்ரேலை விமர்சித்து வருகிறது.

இந்தியா யாருடன் இருக்கிறது?

இஸ்ரேல் இரான் மோதலுக்கு இடையே, இரு நாடுகளிலும் வசிக்கும் தனது குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு காண இந்தியா வலியுறுத்துகிறது.

1988-ல் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தாலும், சமீப காலமாக மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒரு தரப்பை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், அடுத்த ஓராண்டுக்குள் காஸா மற்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று வலியுறுத்தியது.

சர்வதேச நீதிமன்றத்தின் கருத்துக்கு பிறகு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுசபையில் 124 நாடுகள் இதற்கு ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 48 நாடுகள் வாக்களிக்கவில்லை.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளன. இதில் இந்தியா மட்டுமே வாக்களிக்கவில்லை.

இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

பாகிஸ்தான் யாருடன் நிற்கிறது?

அமெரிக்கா, ஃபிஜி, ஹங்கேரி, அர்ஜண்டினா உள்ளிட்ட 14 நாடுகள் அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட 124 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து வாக்களித்தன.

ஐக்கிய நாடுகள் பொதுசபையில், நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, “விடுதலை மற்றும் நீதிக்கான போராட்டத்தில்” திருப்பு முனையாகும் என்று பாலத்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்தார்.

இஸ்ரேல் தூதர் டேனி டானன் இந்த வாக்கெடுப்பு அவமானகரமான முடிவு என்று கூறினார்.

ஹசன் நஸ்ரல்லாவின் இறப்புக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக தீவிர போராட்டங்களை நடத்தினர்.

காஷ்மீர் மற்றும் லக்னோவிலும் இது போன்ற போராட்டங்கள் காணப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பெரிய அளவிலான திட்டமிட்ட தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

இதன் பிறகு, காஸா மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் காஸாவிலும் மேற்கு கரையிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.