ஐ.சி.சி. தரவரிசை – மீண்டும் நம்பர் 1 இடத்தில் பும்ரா

0
17
Article Top Ad

ஐ.சி.சி.யின் ஆடவர் டெஸ்ட் வீரர் தரவரிசையில் முதலிடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் நம்பர் 1 பந்துவீச்சாளராக தனது இடத்தைப் பிடித்தார்.

கான்பூரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்தியாவின் அண்மைய ஏழு விக்கெட் வெற்றியின் போது, ​​பும்ரா, சக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினை முந்தி, இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் பும்ரா மொத்தமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால், பும்ரா 870 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

அதேநேரம், அஸ்வின் 869 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதேவ‍ேளை, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா நியூசிலாந்திற்கு எதிரான தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களின் பின்னணியில் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்திற்குச் சென்றார்.