முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 முன்னாள் எம்.பிக்கள் ‘Good bye”

0
10
Article Top Ad

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 30 பேர் வரை நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, சமல் ராஜபக்ஷ ஆகியோர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, எஸ்.வினோநோதராதலிங்கம், சி.வி. விக்னேஸ்வரன், சிசிர ஜயக்கொடி, விஜயதாஸ ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க முடிவெடுத்துள்ளனர்.

தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு வந்த திஸ்ஸ விதாரண, ஜீ.எஸ்.பீரிஸ், தம்மிக்க பெரேரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலி சப்ரி உள்ளிட்டவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இவ்வாறு முன்னாள் எம்.பிக்கள் 30 பேர் வரை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவில்லை எனத் தெரியவருகின்றது.