இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

0
38
Article Top Ad

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த கிறிஸ் சில்வர்வூட்டின் ஒப்பந்த காலம் கடந்த டி20 உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் முடிவடைந்தது.

இதனையடுத்து சனத் ஜயசூரிய இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய போது, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் அணியின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான 18 மாதங்களுக்கு அவர் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.